Wednesday, May 6, 2009

சிவகங்கைச் சீமை மீட்பு

சிவகங்கை">772க்குப் பிறகு காட்டில் மறைந்து வாழ்ந்த மருது சகோதரர்கள் தமது கிளர்ச்சியை 1779ல் தொடங்கி ஆர்க்காட்டு நவாப், தொண்டைமான்">தொண்டைமான் மற்றும் குப்பினியர்களின் படைகளை வெற்றிக் கொண்டு 1780ல் சிவகங்கைச் சீமையை மீட்டி வேலுநாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்தினர். இந்தப் போரில் பெரியமருது மணலூர் வாயிலிலும், தளபதி சந்தனம் சேர்வை பூவந்தி வாயிலிலும், வேலுநாச்சியார் (இன்னமும் எழுதப்படவில்லை)">வேலுநாச்சியார் மேலூர் வாயிலிலும் முகாமிட்டு போரிட்டது. அரசியாரின் போர் வியூகத்தைத்தையும் வீரத்தையும் வெளிப்படுத்தியது. மேற்கில் திண்டுக்கல்">திண்டுக்கல்லிலிருந்து தக்க சமயத்தில் வந்த ஹைதர்அலி (இன்னமும் எழுதப்படவில்லை)">ஹைதர்அலி யின் படையும் வெற்றிக்கு உதவியது. வேலுநாச்சியார் (இன்னமும் எழுதப்படவில்லை)">வேலுநாச்சியார் மீண்டும் ஆட்சியில் அமர்ந்த விழாவிற்கு ஹைதர்அலி நேரில் வந்திருந்து வாழ்த்துக் கூறினார்.

காளையார் கோவில் (இன்னமும் எழுதப்படவில்லை)">காளையார் கோவிலுக்குத் தேர் செய்யப்படுகிறது. தேர் ஓட்டத்தன்று தேர் நகர மறுக்கிறது. அப்போது வடிவாகத் தேரைச் செய்த குப்பமுத்து ஆசாரி (இன்னமும் எழுதப்படவில்லை)">ஆசாரி மன்னரிடம் அவரது செங்கோல் (இன்னமும் எழுதப்படவில்லை)">செங்கோலையும், மோதிரத்தையும் கொடுத்து தம்மை ஒருநாள் வேந்தராக அறிவித்தால் தேர் நகரும் என்று சொல்ல, அதனை ஏற்று பெரியமருது குப்பமுத்து ஆசாரியை வேந்தராக அறிவிக்கிறார். குப்ப முத்து ஆசாரி மன்னர் உடையில் தேரில் உட்காரத் தேர் நகர்கிறது. ஆனால் குப்பமுத்து ஆசாரி தேரிலிருந்து தவறி விழுந்து இறந்து விடுகிறான். தேரோட்டத்தன்று மன்னர் இறப்பார் என்பது தேர் செய்த குப்பமுத்து (இன்னமும் எழுதப்படவில்லை)">குப்பமுத்து ஆசாரிக்கு முன்பே தெரிந்துள்ளது. இது கண்டு பெரிய மருது வருந்துகிறார். ஆசாரியின் நாட்டுப் பற்றை வியந்து அவனுக்கு கோவிலில் சிலை ஒன்றை வைத்துச் சிறப்புச் செய்கிறார்.

No comments:

பூவந்தி தங்களை அன்புடன் வரவேற்கிறது

அனைவருக்கும் இந்த நாள் நன்னாளாக அமைய வாழ்த்துகள். இந்த இணையதளத்திற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி.

AddThis

Bookmark and Share