Follow by Email

Monday, December 18, 2017

பூவந்தி ஊராட்சி பற்றி சில குறிப்புகள்

 பூவந்தி ஊராட்சி (Poovanthi)தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சிமானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2958 ஆகும். இவர்களில் பெண்கள் 1439 பேரும் ஆண்கள் 1519 பேரும் உள்ளனர்.

Locality Name : Poovanthi ( பூவந்தி ) 
Taluk Name : Tiruppuvanam
District : Sivaganga 
State : Tamil Nadu 
Language : Tamil 
Current Time 08:55 PM  
Date: Monday , Dec 18,2017 (IST)  
Time zone: IST (UTC+5:30) 
Elevation / Altitude: 108 meters. Above Seal level 
Telephone Code / Std Code: 04574


இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்:
  1. பூவந்தி புதுபட்டி
  2. பூவந்தி - ஆதிதிராவிடர்காலனி
  3. மேல பூவந்தி
  4. பூவந்தி கீழ காலணி
  5. கீழப்பூவந்தி
  6. கோட்டைபூவந்தி
  7. பாப்பாவலசை
  8. பூவந்தி மேல காலணி

அடிப்படை வசதிகள்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.
அடிப்படை வசதிகள்எண்ணிக்கை
குடிநீர் இணைப்புகள்258
சிறு மின்விசைக் குழாய்கள்11
கைக்குழாய்கள்9
மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள்4
தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள்0
உள்ளாட்சிக் கட்டடங்கள்24
உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள்2
ஊரணிகள் அல்லது குளங்கள்5
விளையாட்டு மையங்கள்1
சந்தைகள்0
ஊராட்சி ஒன்றியச் சாலைகள்59
ஊராட்சிச் சாலைகள்4
பேருந்து நிலையங்கள்
சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள்10

அஞ்சூர் நாடு - பூவந்தி

 இங்கு கடின உழைப்பாளிகள் மற்றும் விவசாயிகளுடன் கூடிய அழகிய பசுமையான கிராமம். பூவந்தி அனைத்து ஆதாரங்களுக்கும் மேலாக அதிகரித்து வருகிறது .பல கல்வியாளர்களை பணியில் அமர்த்தியுள்ளது. இங்கு முக்கிய கோயில்கள்
1- சமயபுரம் முத்து மரியாமன் கோயில்,
2- பந்தலுடைய அய்யனார் கோயில், 
3-ஒய்யவந்தாள் அம்மன்  கோயில் 
4-முனியன் கோவில் 
திருவிழாக்கள் இங்கு மிகப்பெரியதாக கொண்டாடப்படுகின்றன.

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் தாலுகாவில் உள்ள  ஒரு கிராமம் பூவந்தி ஆகும். சிவகங்கை மாவட்ட தலைநகரத்திலிருந்து மேற்கே 26 கி.மீ. திருப்புழாவிலிருந்து 7 கி.மீ. சென்னை தலைநகரான 486 கி.மீ.

பூவந்தி அஞ்சல் குறியீடு 630611 மற்றும் அஞ்சல் தலை அலுவலகம் திருப்புவனம்  ஆகும்.

பூவந்திக்கு அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த திருப்புவனம்  (7 கி.மீ.), ஏனாதி தேளி (4 கி.எம்.),லாடனேந்தல் (7 கி.மீ),பாப்பாகுடி (7 கி.மீ), அரசனூர் (8 கி.எம்.). மேற்கில் மதுரை கிழக்கு தாலுக்கா, வடக்கு நோக்கி மேலூர் தாலுகா , கிழக்கு நோக்கி சிவகங்கை தாலுகா, தெற்கே மானாமதுரை  தாலுக்கா ஆகியவை சூழப்பட்டுள்ளது.

திருப்புவனம், மதுரை, சிவகங்கை,மேலூர், திருமங்கலம், பூவந்தி நகருக்கு அருகில் உள்ள நகரங்கள் உள்ளன.


இந்த இடம் சிவகங்கை மாவட்டம் மற்றும் மதுரை மாவட்ட எல்லையில் உள்ளது. மதுரை மாவட்டம் மதுரை மேற்கு நோக்கி உள்ளது.

பூவந்தியில் அரசியல்

MDMK , DMK , AIADMK , CPI , INC , ADMK, BJPThanks to link given below
https://ta.wikipedia.org/s/4weo
http://www.onefivenine.com/india/villages/Sivaganga/Tiruppuvanam/Poovanthi

Tuesday, October 5, 2010

மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள்

மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்க்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 முடிய ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயர்க்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுமங்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்றபோதுதான் ஆங்கிலேயரின் அதிருப்தி மற்றும் கோபத்திற்கு ஆளானார்கள். இவர்களது களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார் கோவில் ஆகும்.

ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801, அக்டோபர் 24 இல் திருப்புத்தூரில் இவ்விருவரும் தூக்கில் இடப்பட்டனர். இவர்களது நினைவாலயம் காளையார்கோவிலில் அமைந்துள்ளதுஇன்றைய விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த உடையார் சேர்வை என்ற மொக்க பழநியப்பன் என்பவருக்கும் அவரது மனைவி ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் என்பவருக்கும் மகனாக 1748ல் மகனாகப் பிறந்தவர் பெரியமருது பாண்டியர். ஐந்து ஆண்டுகள் கழிந்து 1753ல் சிறிய மருது பாண்டியர் பிறந்தார். பெரிய மருது பாண்டியர் வெள்ளை நிறத்துடன் இருந்ததால் வெள்ளை மருது பாண்டியர் என்ற பெயரும் உண்டு. பெரிய மருதுவைவிட உயரத்தில் சிறியவராக இருந்ததால் இளைய மருது சின்ன மருது பாண்டியர் என்ற பெயரும் உண்டு.

1772க்குப் பிறகு காட்டில் மறைந்து வாழ்ந்த மருது சகோதரர்கள் தமது கிளர்ச்சியை 1779ல் தொடங்கி ஆர்க்காட்டு நவாப், தொண்டைமான் மற்றும் குப்பினியர்களின் படைகளை வெற்றிக் கொண்டு 1780ல் சிவகங்கைச் சீமையை மீட்டி வேலுநாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்தினர். இந்தப் போரில் பெரியமருது மணலூர் வாயிலிலும், தளபதி சந்தனம் சேர்வை பூவந்தி வாயிலிலும், வேலுநாச்சியார் மேலூர் வாயிலிலும் முகாமிட்டு போரிட்டது. அரசியாரின் போர் வியூகத்தைத்தையும் வீரத்தையும் வெளிப்படுத்தியது. மேற்கில் திண்டுக்கல்லிலிருந்து தக்க சமயத்தில் வந்த ஹைதர்அலி யின் படையும் வெற்றிக்கு உதவியது. வேலுநாச்சியார் மீண்டும் ஆட்சியில் அமர்ந்த விழாவிற்கு ஹைதர்அலி நேரில் வந்திருந்து வாழ்த்துக் கூறினார்.


காளையார் கோவிலுக்குத் தேர் செய்யப்படுகிறது. தேர் ஓட்டத்தன்று தேர் நகர மறுக்கிறது. அப்போது வடிவாகத் தேரைச் செய்த குப்பமுத்து ஆசாரி மன்னரிடம் அவரது செங்கோலையும், மோதிரத்தையும் கொடுத்து தம்மை ஒருநாள் வேந்தராக அறிவித்தால் தேர் நகரும் என்று சொல்ல, அதனை ஏற்று பெரியமருது குப்பமுத்து ஆசாரியை வேந்தராக அறிவிக்கிறார். குப்ப முத்து ஆசாரி மன்னர் உடையில் தேரில் உட்காரத் தேர் நகர்கிறது. ஆனால் குப்பமுத்து ஆசாரி தேரிலிருந்து தவறி விழுந்து இறந்து விடுகிறான். தேரோட்டத்தன்று மன்னர் இறப்பார் என்பது தேர் செய்த குப்பமுத்து ஆசாரிக்கு முன்பே தெரிந்துள்ளது. இது கண்டு பெரிய மருது வருந்துகிறார். ஆசாரியின் நாட்டுப் பற்றை வியந்து அவனுக்கு கோவிலில் சிலை ஒன்றை வைத்துச் சிறப்புச் செய்கிறார்.

24-10-1801 அன்று மருது பாண்டியர்களை தூக்கிலிட்டது வெள்ளையரசு அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தாரும் தூக்கிலிடப்பட்டனர்

தமிழ்நாடு அரசு மருது சகோதரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மருதுபாண்டியர் நினைவிடம் அமைத்துள்ளது. இங்கு சின்ன மருது, பெரிய மருது ஆகியோரின் 8 அடி உயர முழு உருவச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சிவகங்கைச் சீமையின் வீரமங்கையர்

சிவகங்கைச் சீமையின் வீரமங்கையர்சிவகங்கை நகரம் தனது பெயரை இழந்து உசேன் நகர் என்ற பெயர் தாங்கி, பெருமை இழந்து கிடந்தது. இந்தக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சிவகங்கை ராணி வேலுநாச்சியாரின் வீரப்படை எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு போர்முரசு கொட்டிப் புறப்பட்டது. சுதந்திர தாகம் கொண்ட அந்தப் படையின் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் கோச்சடை மல்லாரிராயன், திருப்புவனம் ரங்கராயன், மானாமதுரை பிரைட்டன், பூரியான், மார்டினஸ் ஆகியோர் மண்டியிட்டனர்.

இந்தச் சூழ்நிலையில் காளையார் கோவில் கோட்டையோ போருக்கு ஆயத்தமாகத் தொடங்கியது. படைவீரர்கள் களைப்பைக் களைந்துவிட்டு அன்று அதிகாலை வேளையில் வேலுநாச்சியாரின் அவசர அழைப்புக் கேட்டு முக்கிய தளபதிகள் அனைவரும் கொலுமண்டபம் விரைந்தனர். அங்கே ராணி வேலுநாச்சியார், அவர்களுக்கு முன்னதாக வந்து காத்திருந்தார். தளபதிகளைக் கண்டதும் ராணி முகத்தில் புன்னகை மொட்டு விட்டது. “அனைவரும் வாருங்கள். நீங்கள் எதிர்நோக்கிய காலம் வந்துவிட்டது. நமது படைகளை மூன்று பிரிவாகப் பிரித்து விடுங்கள். ஒரு பிரிவுக்கு சின்ன மருது தலைமை தாங்குவார். அந்தப் பிரிவு 3 ஆயிரம் படைவீரர்களோடும் எட்டு பீரங்கிகளோடும் திருப்பத்தூர் நோக்கிப் புறப்படட்டும். இன்னொரு பிரிவு பெரிய மருது தலைமையில், 4 பீரங்கிகளோடு சிவகங்கை சென்று அரண்மனைக்கு வெளியே தெப்பக்குளக்கரையில் உள்ள உமராதுல் உபராகானையும் அவனது படைகளையும் தாக்கி வெற்றி கொள்ளட்டம்,” என்று நாச்சியார் கூறி முடிக்கும் முன்பே சின்ன மருது அவசரமாய் இடைமறித்து, “மகாராணி சிவகங்கைக் கோட்டையைக் கைப்பற்றுவதுதானே நமது முக்கிய வேலை? அதைப் பற்றி…”

“சின்ன மருது படையும், எனது தலைமையில் மற்றொரு பிரிவுப் படையினரும், நமது பெண்கள் படையும் அந்த வேலையைச் செய்துமுடிக்கும், போதுமா?”

“மகாராணி மன்னிக்க வேண்டும். சிவகங்கைக் கோட்டையோ பலம் வாய்ந்தது. அந்தக் கோட்டையை எப்படி சின்னப் படைப்பிரிவு மூலமும் அதுவும் வெள்ளையரின் பீரங்கிகளையும் துப்பாக்கிகளையும் எதிர்த்துப் போரிட்டுப் பிடிக்க…?”

இந்த முறை குறுக்கிட்ட பெரிய மருது தனது கருத்தை முடிக்கும் முன்னே, ஒரு புதுக்குரல் மண்டபத்தின் வாயிலில் இருந்து ஒலித்தது.

அங்கே தள்ளாத கிழவி ஒருத்தி வந்து கொண்டிருந்தாள்.
சபையின் நடுவே தடுமாறி நடந்து வந்த அவள், வேலுநாச்சியாரை வணங்கிவிட்டு, பேசத் தொடங்கினாள்.

“தளவாய் பெரிய மருது அவர்களே, இப்போது நவராத்திரி விழா நடந்து வருகிறது. நாளை மறுநாள் விஜயதசமி. அன்று சிவகங்கைக் கோட்டையில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் கொலு வைக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்காக அன்று ஒருநாள் காலை மட்டும் மக்களுக்கு, அதுவும் பெண்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதைப் பயன்படுத்தி ராணியாரின் தலைமையில் பெண்கள் படை உள்ளே கோட்டைக்குள் புகுந்துவிடும். பிறகு என்ன? வெற்றி, நமது பக்கம்தான்.”

அவள் மூச்சுவிடாமல் சொல்ல, அத்தனை பேரின் கண்களும் வியப்பில் விர்ந்தன.
பெரிய மருதுவின் சந்தேகப் பார்வையைக் கண்டதும் அந்தப் பெண் கடகடவென நகைத்தாள். “பேராண்டி பெரிய மருது, இப்போது என்னைத் தெரிகிறதா?” என்றபடியே மெல்ல தனது தலையில் கை வைத்து வெள்ளை முடியை விலக்கினாள். அந்த முடி, கையோடு வந்தது. குயிலி புன்னகை மின்ன நின்றிருந்தாள்.

ஆம், சிவகங்கைக் கோட்டையை உளவு பார்க்க ராணியின் உயிர்த்தோழி குயிலி மாறுவேடத்தில் சென்றாள் என்ற உண்மை வெளிச்சமிட்டு நின்றது.

“என்ன பெரிய மருது, உங்கள் சந்தேகம் தீர்ந்ததா? நாளை மறுநாள் நமது படைகள் போர்முரசு கொட்டட்டும், இந்த முறை ஒலிக்கும் முரசு, வெள்ளையரின் அடிமை விலங்கை ஒடித்து, விடுதலை வெளிச்சத்தைக் கொண்டுவரும் முரசாக ஒலிக்கட்டும்!” என்றபடியே ராணி சிம்மாசனத்தில் இருந்து குயிலியோடு அந்தப்புரம் நோக்கிச் சென்றார்.

ராணி குறித்ததுபோல படைகள் இரண்டு பிரிவாகப் பிரிந்து, முரசறைந்து போர் முழக்கமிட்டுப் புறப்பட, ராணி வேலுநாச்சியாரின் தலைமையில் பெண்கள்படை சிவகங்கை நகருக்குள் புகுந்தது. அம்மனுக்கு சாத்தி வழிபட அவர்கள் கையில் பூமாலைகளோடு அணிவகுத்தனர்.

பூமாலைக்குள் கத்தியும் வளரியும் பதுங்கி இருந்தது பரங்கியருக்குத் தெரியாது. வேலுநாச்சியாரும் தனது ஆபரணங்களை எல்லாம் களைந்துவிட்டு சாதாரணப் பெண்போல மாறுவேடத்தில் கோயிலுக்குள் புகுந்தார். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவரோடு கோட்டைக்குள் இருந்து வெளியேறிய பிறகு, இன்று தான் மட்டும் தனியே மாறுவேடத்தில் வரவேண்டி வந்துவிட்டதே என்றி எண்ணி வேலு நாச்சியார் ஒரு கணம் கலங்கினார். ஆனால், ஒரே நொடியில் அந்தக் கலக்கம் காலாவதியானது. “எனது கணவரை மாய்த்து நாட்டை அடிமைப்படுத்திய நயவஞ்சகரை ஒழிப்பேன். விடுதலைச் சுடரை நாடு முழுக்க விதைப்பேன்!” என்ற வீரசபதம் நினைவில் புகுந்தது.

அவரது கண்கள் கோட்டையின் ஒவ்வொரு பகுதியையும் அலச ஆரம்பித்தது. விஜயதசமி என்பதால் ஆயுதங்கள் அனைத்தையும் கோட்டையின் நில முற்றத்தில் வழிபாடு நடத்த குவித்து வைத்திருந்தனர். ஒரு சில வீரர்களின் கையில் மட்டுமே ஆயுதங்கள் இருந்தன.

ராணி கோட்டையை அளவெடுத்தது போலவே குயிலியின் கண்களும் அளவெடுத்தன. நிலா முற்றத்தில் குவிக்கப்பட்டிருந்த ஆயுதங்களைக் கண்டதும், அவளது மனதில் ஒரு மின்னல் யோசனை தோன்றி மறைந்தது.

ஆனால், அந்த யோசனையை வெளியே சொன்னால் செயல்படுத்த அனுமதி கிடைக்காது என்பதை அறிந்திருந்த குயிலி, மெதுவாக ராணி வேலுநாச்சியாரைப் பிரிந்து கூட்டத்தோடு கலந்துகொண்டாள்.

அதே நேரத்தில் கோட்டையில் பூஜை முடிந்தது. அனைவரும் கோட்டையை விட்டு வெளியேற ஆரம்பித்தனர். பொதுமக்கள் கூட்டமும் மெதுவாக கலையத் தொடங்கியது. வேலுநாச்சியார் தனது போரைத் தொடங்க இதுவே தருணம் என்பதை உணர்ந்தார். அவரது கை மெல்ல தலைக்குமேல் உயர்ந்தது. மனத்திற்குள் ராஜராஜேஸ்வரியை வணங்கியபடியே, “வீரவேல்! வெற்றிவேல்!!” என்று விண்ணதிர முழங்கினாள்.


அந்த இடிக்குரல் அரண்மனையே கிடுகிடுக்கும் அளவிற்கு முழங்கியது. ராணியின் குரலோசையைக் கேட்டதும் பெண்கள் படை புயலாய்ச் சீறியது. புது வெள்ளமாய்ப் பாய்ந்தது. மந்திர வித்தைபோல பெண்களின் கைகளில் வாளும் வேலும் வளரியும் தோன்றின.

ஆயுதங்கள் அனைத்தையும் மின்னலெனச் சுழற்றி வெள்ளையர்களை சிவகங்கைப் பெண்கள் படை வெட்டிச்சாய்த்தது. இந்தக் காட்சியை மேல்மாடியில் நின்று பார்த்துக் கொண்டிருந்த பார்சோருக்கு இடிவிழுந்தது போலாயிற்று.

“சார்ஜ்!..” என்று பான்சோர் தொண்டை கிழியக் கத்தியபடியே, தனது இடுப்பில் இருந்த 2 கைத்துப்பாக்கிகளை எடுத்து சரமாரியாகச் சுட ஆரம்பித்தான். வெள்ளைச் சிப்பாய்கள் ஆயுதக் குவியலை நோக்கி ஓடிவர ஆரம்பித்தார்கள். சிவகங்கைக் கோட்டைக்குள் பூகம்பம் வெடித்தது.

ராணி வேலுநாச்சியாரின் வாள் மந்திரமாய் சுழன்றது. ஆயுதமின்றித் தவித்த சிலர் உயிர் பிழைத்தால் போதும் என்று தப்பி ஓட்டம் பிடித்தனர்.


வேலு நாச்சியார் பான்சோரைப் பிடிக்க மேல்மாடத்திற்குச் செல்வதற்குள் அங்கிருந்த யாரோ ஒரு பெண் தனது உடல் முழுக்க கொளுந்துவிட்டு எரியும் தீயோடு, “வீரவேல், வெற்றிவேல்” என்று, அண்டம் பொடிபடக் கத்தியபடியே கீழே குதித்தாள். அந்தப் பெண் நேராக நிலாமுற்றத்தில் இருந்த ஆயுதக் குவியலில் வந்து விழுந்தாள்.

ஆயுதக் குவியலில் பற்றிய தீயைக் கண்டதும் பான்சோருக்கும், அவனது வீரர்களுக்கும் அஸ்தியில் காய்ச்சல் கண்டது.

பான்சோர் தப்பி ஓட முயன்றான். ஆனால் வேலுநாச்சியாரின் வீரவாள் அவனை வளைத்துப் பிடித்தது. தளபதி சரணடைந்தான். கோட்டை மீண்டும் ராணியின் கைக்கு வந்தது. இதே நேரத்தில் பெரிய மருது உமராதுல் உபராக்கானை விரட்டி அடித்துவிட்டு வெற்றியோடு வந்தார்.

திருப்பத்தூர்க் கோட்டையை வென்ற சின்ன மருதுவும் தனது படைகளோடு வந்து சேர்ந்தார். வெற்றி முழக்கம் எங்கும் ஒலித்தது. ஆனால் வேலுநாச்சியாரின் கண்கள் மட்டும் கூட்டத்தை அளவெடுப்பது போல சுற்றிச் சுற்றி வந்தன.

போர் தொடங்கிய போது குயிலின் எண்ணம் ஆயுதக் கிடங்கின் மேல் நின்றது. அப்போது அவள் எண்ணினாள், “நமது விடுதலைக்கான இறுதிப்போர் இது. இதில் நாம் தோல்வி அடைந்தால் இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் வெற்றி பெற முடியாது. நான் வெற்றிக்கு வழிகாட்ட ஒளியூட்டப் போகிறேன். என்னைத் தடுக்காதே,” என்று கூறியபடியே உடல் முழுவது நெய்யில் குளித்தபடி கோயிலில் இருந்த பந்தத்தோடு அரண்மனையின் உப்பரிகையை நோக்கிப் பறந்தாள்.

அரண்மனை உப்பரிகையை அடைந்ததும் தீப்பந்தத்தால் தனது உடலில் தனக்குத்தானே தீவைத்துக்கொண்டு, அந்த ஆயுதக் குவியலில் குதித்து விட்டாள். வெள்ளையர்களை ஆயுதம் அற்றவர்களாக்கி நமக்கு வெற்றியை அள்ளித்தர, …. தன்னையே பலியிட்டுக்கொண்டாள்.

மானம் காக்கும் மறவர் சீமையின் விடுதலைக்காக தன்னையே பலிகொடுத்த அந்தத் தியாக மறத்திக்காக வேலுநாச்சியாரின் வீர விழிகள் அருவியாய் மாறின. கண்ணீர் வெள்ளம் அவரது உடலை நனைத்தது.

அவர் மட்டுமா அழுதார்? குயிலிக்காக சிவகங்கைச் சீமையே அழுதது. குயிலி போன்ற தியாகச்சுடர்கள் தந்த ஒளியின் ஒட்டுமொத்தக் கூட்டுத்தொகைதான் இந்தியாவிற்கு விடுதலை வழிகாண வைத்தது. தங்கள் உடலையே எரிபொருளாக்கிய எத்தனையோ குயிலிகள் இன்னும் சரித்திரம் ஏறாமலேயே சருகாய்ப் போனார்கள். அவர்களது உன்னத தியாகத்திற்குத் தலைவணங்குவோமாக!


எழுதியவர்: கீதா ரவீந்திரன்
தேங்க்ஸ் :  http://www.tamilhindu.com/2010/07/great-women-warriors-of-sivagangai/
வரலாறு

சிவகங்கை சீமை

சிவகங்கை சீமை - 1959 இல் வெளிவந்த ஒரு திரைப்படம் சிவகங்கையின் சிறப்புகளை சித்தரிக்கிறது.

http://www.onlinewatchmovies.net/tamil/sivagangai-seemai-1959-tamil-movie-watch-online.html

ராணி வேலுநாச்சியாருக்கு பிறகு சிவகங்கையின் நிலைமை என்ன ஆயிற்று, மருதுபாண்டியர்கள் யார் ?..

மருதுபாண்டியர்கள் வாழ்க்கை முறைகள்,பெரியமருது,சின்னமருது இவர்கள் இருவரும் வரலாற்றில் இடம்பெறுவதன் காரணம் ,இதுபோன்ற எத்தனையோ விசயங்களை தமிழ்நாட்டில் பிறந்த நாம் தெரிந்தாக வேண்டாம்.

Tuesday, August 3, 2010

கோவில் திருவிழா அழைப்பிதழ்


கோவில் திருவிழா அழைப்பிதழ்

விக்ருதி வருடம் - ஆவணி மாதம் 4  , ஆகஸ்ட் 20 , வெள்ளி, சுபமுகூர்த்த நாள் அன்று

   முதன் முறையாக மிகவும் பிரமாண்டமாக கோவில் கும்பாபிசேகம் நடக்கவிருக்கிறது,
 அனைவரையும் எங்கள் ஊர் திருவிழாவுக்கு  வருக, வருக, வருக எனஅன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.,
இப்படிக்கு 
ம.பாலமுருகன் மற்றும் குடும்பத்தார்கள் ,உறவினர்கள் ,நண்பர்கள்
http://poovanthi.blogspot.com/2010/08/blog-post.html 


Hi to all, 
Please accept our humble obeisances.

I am very happy to welcome you and your temple devotees / congregation for
the opening of our new ayyanar and amman temple to be held on 20 th august 2010.

It will be of great use if you can inform us in advance the number of
devotees attending the festival, so that we can make necessary for their
accomodation and prasadam.

I advise you that you make your travel arrangements in advance, because it
is a festival season near  Madurai.

Thanking you.

Yours in the service of Lord
M.Balamurugan

PS: Details of the program will follow.

Please contact us at:

Balamurugan
poovanthi,
sivagangai-630611
Tamil Nadu
India.


Email : rasiganbalu@gmail.com

for mor detail..pls see our website

http://poovanthi.blogspot.com/2010/08/blog-post_03.html

கோவில் கும்பாபிசேகம்

அஞ்சூர்  நாடான பூவந்தியில்  கோயில்கள் எண்ணற்றவை

அவற்றுள் மிஹவும் பிரபலமான மற்றும் மிஹபெரிய கோவிலான ஓய்யவந்தால்  அம்மன் கோவில் மற்றும் அய்யனார் கோவில் , இவை இரண்டும் தான் .

கடந்த ஒரு வருடமாக கோவில் வேலைகள் அனைத்தும் ஊர் பெரியோர்களால் அதி வேகமாக கவனமாக நடந்து வந்தது,..அவர்களுக்கு என்றும் ஊர் பொதுமக்கள் கடமைப்பட்டுள்ளனர்.
ஐந்து ஊர்கள் சேர்ந்து ஒரே நாடாக சிவகங்கை மாவட்டத்தில் தென்படுகிறது.. இவ்வாறு அமைந்ததற்கு காரணம் ஒட்ற்றுமை. (UNITY ) .

கோவில் கும்பாபிசேகம் 

                                                   அய்யனார் கோவில் மற்றும் அம்மன் கோவில் இப்பொழுது அணைத்து வேலைபாடுகளும் முடிந்து மிக பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது.
அத்துடன் எண்ணற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது , கரகாட்டம் , ஆடல்பாடல் போன்ற அனைத்தும் நடக்கவிருக்கிறது ., அனைவரும் வருகை தந்து விழாவை சிறப்பித்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் ---- ஊர் பொதுமக்கள்  பூவந்தி...


இந்த புகைப்படங்கள் கோவில் வேலைபாடுகள் நடக்க்ம்போது எடுத்ததுங்க,,,


Sunday, May 10, 2009

கவிஞர் கலாப்ரியா எழுதிய பிரிவுகள் என்ற கவிதை

பிரிவுகள்
************

தமிழ்க் கவிதையில் வித்தியாசமான முயற்சிகள் சாதனைகள் எப்போதும் உண்டு. முற்றிலும் முரண்பட்ட ஒன்றைச் சொல்லி, அதன் மூலம் மூலப்பொருளை உணர்த்தும் வல்லமை தமிழ்க் கவிகளுக்கு உண்டு. இன்று நாம் பார்க்கப் போகும் கவிதை, கவிஞர் கலாப்ரியா எழுதிய பிரிவுகள் என்ற கவிதை:


பிரிவுகள்

நாளை இந்தக் குளத்தில்
நீர் வந்து விடும்
இதன் ஊடே
ஊர்ந்து நடந்து
ஓடிச் செல்லும்
வண்டித் தடங்களை
இனி காண முடியாது
இன்று புல்லைத்
தின்று கொண்டிருக்கும்
ஆடு, நாளை
அந்த இடத்தை
வெறுமையுடன்
சந்திக்கும்
மேலே பறக்கும்
கழுகின் நிழல்
கீழே
கட்டாந்தரையில்
பறப்பதை
நாளை பார்க்க முடியாது
இந்தக் குளத்தில் நாளை
நீர் வந்து விடும்

மிக அழகான கவிதை. குளத்தில் நீர் வருவது என்பது கிராமம் முழுவதற்குமே மகிழ்ச்சி அளிக்கும் செய்தி. குளத்தில் நீர் வந்து நிறையுமானால், குடிநீர், விவசாயம், அதன் மூலம் கிராம வளம் எல்லாம் பெருகும். உற்சாகம் பெருகும். செயல்பாடுகள் கூடும். வேலைகள் கூடும். உற்பத்தி கூடும்.

ஆனால், கலாப்ரியா கண்ணில் வேறொன்று படுகிறது. இது நாள் வரை நீர் வராமல் இருந்தபோது, அதே குளம் எதெதற்கெல்லாம் பயன்பட்டதோ, அவையெல்லாம் இனி நடைபெற முடியாமல் போய்விடுமே என்ற வருத்தம் அவருக்குத் தென்படுகிறது. என்ன சொல்கிறார் பாருங்கள் : வண்டித் தடங்களை இனி காண முடியாது, புல் மேய்ந்த ஆடு இனி வெறுமையைச் சந்திக்கும், மேலே பறக்கும் கழுகின் நிழலைப் பார்க்க முடியாது. இது ஒரு வகை வலிந்து உருவாக்கப்படும் முரண் அணி.

உண்மையில் கவிக்கு அந்தக் குளத்தில் நீர் வருவதில் மகிழ்ச்சி இல்லையா? அதெப்படி இல்லாமல் இருக்கும். நிச்சயம் உண்டுதான். அதுதான் வளர்ச்சி தரப்போவது. அதனால்தான், கவிதையின் முதலிலும் கடைசியிலும் குளத்தில் நீர் வரப்போவதை அழுத்தமாகச் சொல்கிறார். ஆனால், இன்றுவரை, அதே குளத்தைப் பயன்படுத்திக்கொண்டிக்கும் பிறர் அதனால் பாதிக்கப்படுவார்களே என்பது ஒரு சின்ன கரிசனம்.

இதை வேறு மாதிரியாகவும் வாசிக்கலாம். அதுநாள் வரை மழையே இல்லாமல், நீர் வரத்தே இல்லாமல் பல ஆண்டுகளாக, இப்படிப்பட்ட வண்டித்தடம் உருவாதல், ஆடு புல் மேய்தல், கழுகின் நிழல் படிதல் போன்ற விஷயங்கள் ஏற்பட்டுவிட்டன. அதுவே இயல்பு என்று நினைக்கும் அளவுக்கு, நீர் பஞ்சம் அங்கே இருந்திருக்கவேண்டும். சட்டென, நாளை இக்குளத்தில் நீர் வருமானால், அதுவரை இருந்த இயல்பு பாதிக்கப்படுமே என்ற கரிசனத்தைக் இக்கவிதை சொல்வதாகவும் கொள்ளலாம். நீர் பெருகி பல ஆண்டுகள் ஆயிற்று என்பதற்கு கவி தரும் ஒரு முக்கிய ஆதாரம், வண்டித்தடம் உருவாதல். அவ்வளவு சீக்கிரத்தில் வண்டித்தடம் உருவாகிட முடியாது. பல ஆண்டுகள் பயன்பாட்டிலேயே வண்டித்தடம் உருவாக முடியும்.

இக்கவிதையை நீர் வரத்தின் மகிழ்ச்சியாகவும், இருப்பவைகள் இழக்கப் போகும் இயல்பைச் சொல்வதாகவும் எடுத்துக்கொள்ளலாம். ஒரு கவிதை இப்படி பல அடுக்கு அர்த்ததைத் தன்னுள் கொண்டிருப்பது அபூர்வமானது. இக்கவிதை அப்படிப்பட்ட ஒரு அபூர்வம்.

Saturday, May 9, 2009

பூவந்தி - பெயர்க்காரணம்

பூவந்தி - பெயர்க்காரணம்
--------------------------------
பூவந்தி என்பது ஒரு மரத்தின் பெயராகும். ஆங்கிலத்தில் South India Soapnut என்று சொல்லப்படுகிறது.இந்த பெயர் எப்படி வந்தது என்ற ஆராய்ச்யில் ஈடுபட்டுள்ளேன், இந்த பெயர் இந்த ஊருக்கு எப்படி வந்தது என்று தெரிந்திருந்தால் எனக்கு தெரியப்படுத்தவும் rasiganbalu@gmail.com...

இந்த மரத்தின் விவரங்கள் பிவருவன
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

Common name: South India Soapnut, three-leaf soapberry, trijugate-leaved sop-nut • Hindi: फेनिल phenil, रिष्ट risht, रिष्टक rishtak • Manipuri: কেক্ৰূ Kekru • Marathi: फेनिल phenil, रिंठी rinthi, रिठा ritha • Tamil: புனலை punalai, பூந்தி punthi, பூவந்தி puvanti • Malayalam: ചവക്കായ് cavakkaay, പശക്കൊട്ടമരം pasakkottamaram, ഉറുവഞ്ചി uruvanchi • Telugu: కుంకుడుచెట్టు kunkuduchettu, ఫేనిలము phenilamu • Kannada: ಅಮ್ಟಳಕಾಯಿ amtalakaayi, ನೊರೆಕಾಯಿ norekaayi, ತೊಗಟೆ ಮರ togate mara • Bengali: ৰীঠা Ritha • Oriya: ରୀଠା Ritha • Konkani: रिठा ritha • Urdu: Phenil, ريٹھا Reetha • Assamese: হাইঠা aritha • Gujarati: અરીઠી arithi, અરીઠો aritho, અરીઠું arithu • Sanskrit: हृष्टः hrishtah, फेनका phenaka, फेनिल phenil, रिष्टः rishtah, रिष्टक rishtak, रीठा rita, सारिष्ट sarishta, ऊर्ध्वशोधनः urdhvashodhanah Botanical name: Sapindus trifoliatus Family: Sapindaceae (Soapberry family)
Synonyms: Sapindus laurifolius


South India Soapnut is a large tree, growing up to 25 m tall. Leaves are compound, 15-30 cm long. Leaflets are nearly stalkless, 2-3 pairs, 8-18 cm long, 5-7.5 cm broad, elliptic-lanceshaped, smooth, pointed tipped, base slightly oblique, terminal pair longest. Flowers are greenish-white, in terminal, slightly velvety panicles. Flower stalks are 3 mm long, velvety. Sepals are 5, slightly fused at the base, 4-5 mm long, ovate-oblong, velvety. Petals are 5, free, 5-6 mm long, lance-shaped to ovate, clawed, bristly. Disc is 5-lobed. Stamens are 8, free, filaments 2-3 mm long. Ovary is 3-locular, 3-lobed, ovoid, about 3 mm long, velvety, with 1 ovule in each locule. Fruit is 2-3 lobed, 1.3-2 cm long, velvety when young, hard and smooth when mature. Each cell has a 6-9 mm black, round seed, which is what is popular as a traditional washing soap. Flowering: November-January.


Botanical Information:

Botanical Name: Sapindus Mukorossi
Common Names: Soapnut, Soap Nut, Soapberry, Soap Berry, Washnut, and Wash Nut.
Common Names (in Hindi): Ritha, Reetha, Aritha, Dodan, Doadni, Doda, Kanma and Thali

Kingdom: Plantae - Plants
Subkingdom: Tracheobionta - Vascular plants
Superdivision: Spermatophyta - Seed plants
Division: Magnoliophyta - Flowering plants
Class: Magnoliopsida - Dicotyledons
Subclass: Rosidae
Order: Sapindales
Family: Sapindaceae – Soapberry family
Genus: Sapindus – Soapberry
Species : Sapindus Mukorossi – Chinese soapberryWednesday, May 6, 2009

சிவகங்கை மாவட்டம்

சிவகங்கை மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் முப்பதொன்று மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் சிவகங்கை ஆகும். காரைக்குடி இம்மாவட்டத்தில் உள்ள மற்றொரு பெரிய நகரம் ஆகும்.

சிவகங்கை மாவட்ட அதிகார பூர்வ வலைத்தளம்

சிவகங்கைச் சீமை மீட்பு

சிவகங்கை">772க்குப் பிறகு காட்டில் மறைந்து வாழ்ந்த மருது சகோதரர்கள் தமது கிளர்ச்சியை 1779ல் தொடங்கி ஆர்க்காட்டு நவாப், தொண்டைமான்">தொண்டைமான் மற்றும் குப்பினியர்களின் படைகளை வெற்றிக் கொண்டு 1780ல் சிவகங்கைச் சீமையை மீட்டி வேலுநாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்தினர். இந்தப் போரில் பெரியமருது மணலூர் வாயிலிலும், தளபதி சந்தனம் சேர்வை பூவந்தி வாயிலிலும், வேலுநாச்சியார் (இன்னமும் எழுதப்படவில்லை)">வேலுநாச்சியார் மேலூர் வாயிலிலும் முகாமிட்டு போரிட்டது. அரசியாரின் போர் வியூகத்தைத்தையும் வீரத்தையும் வெளிப்படுத்தியது. மேற்கில் திண்டுக்கல்">திண்டுக்கல்லிலிருந்து தக்க சமயத்தில் வந்த ஹைதர்அலி (இன்னமும் எழுதப்படவில்லை)">ஹைதர்அலி யின் படையும் வெற்றிக்கு உதவியது. வேலுநாச்சியார் (இன்னமும் எழுதப்படவில்லை)">வேலுநாச்சியார் மீண்டும் ஆட்சியில் அமர்ந்த விழாவிற்கு ஹைதர்அலி நேரில் வந்திருந்து வாழ்த்துக் கூறினார்.

காளையார் கோவில் (இன்னமும் எழுதப்படவில்லை)">காளையார் கோவிலுக்குத் தேர் செய்யப்படுகிறது. தேர் ஓட்டத்தன்று தேர் நகர மறுக்கிறது. அப்போது வடிவாகத் தேரைச் செய்த குப்பமுத்து ஆசாரி (இன்னமும் எழுதப்படவில்லை)">ஆசாரி மன்னரிடம் அவரது செங்கோல் (இன்னமும் எழுதப்படவில்லை)">செங்கோலையும், மோதிரத்தையும் கொடுத்து தம்மை ஒருநாள் வேந்தராக அறிவித்தால் தேர் நகரும் என்று சொல்ல, அதனை ஏற்று பெரியமருது குப்பமுத்து ஆசாரியை வேந்தராக அறிவிக்கிறார். குப்ப முத்து ஆசாரி மன்னர் உடையில் தேரில் உட்காரத் தேர் நகர்கிறது. ஆனால் குப்பமுத்து ஆசாரி தேரிலிருந்து தவறி விழுந்து இறந்து விடுகிறான். தேரோட்டத்தன்று மன்னர் இறப்பார் என்பது தேர் செய்த குப்பமுத்து (இன்னமும் எழுதப்படவில்லை)">குப்பமுத்து ஆசாரிக்கு முன்பே தெரிந்துள்ளது. இது கண்டு பெரிய மருது வருந்துகிறார். ஆசாரியின் நாட்டுப் பற்றை வியந்து அவனுக்கு கோவிலில் சிலை ஒன்றை வைத்துச் சிறப்புச் செய்கிறார்.

பூவந்தி தங்களை அன்புடன் வரவேற்கிறது

அனைவருக்கும் இந்த நாள் நன்னாளாக அமைய வாழ்த்துகள். இந்த இணையதளத்திற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி.

AddThis

Bookmark and Share